அபுதாபி: பி.எஸ்.எல் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் 7ஆவது ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்து, பவுண்டரியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, பந்தை தடுக்க தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் வேகமாக ஓடினார். ஆனால், சக வீரரான முகமது ஹஸ்னைன் காலில் அவரது தலை மோதியதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டு பிளெசிஸுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. அவர் விரைவாக மீண்டு வரவேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.