ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு இவ்வளவு சம்பளமா? இதில் சம்பள உயர்வு வேறையா?

சீனியர் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களை கவரும் பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களின் ஊதியத்தை திட்டமிட்டு உள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது. தற்போது வரை இந்திய தேர்வு குழு உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 90 லட்ச ரூபாயும், தேர்வு குழு தலைவருக்கு 1 கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

BCCI
BCCI
author img

By

Published : Jul 1, 2023, 3:44 PM IST

Updated : Jul 1, 2023, 4:10 PM IST

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழுவினரின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 என மூன்று வடிவங்களாக இந்திய கிரிக்கெட் உள்ளது. அந்தந்த வடிவங்களுக்கு ஏற்ற வகையில் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் இந்த தேர்வுக் குழுவினர் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்த தேர்வுக் குழுவுக்கு உறுப்பினர்களாக 5 பேர் உள்ளனர். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு மூத்த இந்திய அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச 20 ஓவர் போட்டிகள், இந்தியா 'ஏ' அணிகள், உள்நாடு மற்றும் வெளியூர் தொடர்கள், பிரசிடென்ட்ஸ் XI அல்லது BCCI XI ஆகிய சர்வதேச அணிகளுடன் விளையாடும் அணிகளை இவர்கள் தேர்வு செய்கின்றனர்.

அதேபோல் பெண்கள் மற்றும் ஜூனியர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கு என தனி தேர்வுக் குழு உள்ளது. இந்த தேர்வுக் குழுவில் 5 உறுப்பினர்கள் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உள்ளனர். அதில் 5 உறுப்பினர்களுக்கு மட்டுமே வீரர்களை தேர்வு செய்வதில் வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. கிரிக்கெட் வாரியத்துடனான ஒருங்கிணைப்பு பணிகளை ஒருங்கிணைப்பு பணிகளை ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இந்திய தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்வுக் குழுவில் சீனியர் மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெறாமல் தவிர்த்து வருவதற்கு முக்கிய காரணமாக ஊதிய பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வரை இந்திய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 90 லட்ச ரூபாயும், தேர்வுக் குழு தலைவருக்கு 1 கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊதிய உயர்வின் மூலம் சீனியர் வீரர்கள் உள்ளிட அதித் திறன் வாயந்த முன்னாள் வீரர்கள் இந்திய தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்க விரும்பலாம் என எதிர்பார்ப்பதாக பிசிசிஐ தகவல் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் ஜூலை 20ல் தொடக்கம்... பொது சிவில் சட்ட மசோதா தாக்கலா?

Last Updated : Jul 1, 2023, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.