கொழும்பு: 16வது ஆசியக் கோப்பை தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடந்தன. இதன் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சூப்பர் 4 சுற்றில் மோதிக் கொண்ட இந்த அணிகளில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
-
𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆
— ICC (@ICC) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
India storm to victory in the #AsiaCup2023 Final against Sri Lanka 🔥
📝: https://t.co/UROMhx0HTs pic.twitter.com/X4OOrGDJ6H
">𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆
— ICC (@ICC) September 17, 2023
India storm to victory in the #AsiaCup2023 Final against Sri Lanka 🔥
📝: https://t.co/UROMhx0HTs pic.twitter.com/X4OOrGDJ6H𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆
— ICC (@ICC) September 17, 2023
India storm to victory in the #AsiaCup2023 Final against Sri Lanka 🔥
📝: https://t.co/UROMhx0HTs pic.twitter.com/X4OOrGDJ6H
இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மேலும், ஆல் ரவுண்டர் அக்சட் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைக்கப்பட்டார்.
-
Brutal display of bowling by India 💥
— ICC (@ICC) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sri Lanka are all out for 50 in the #AsiaCup2023 Final.
📝: https://t.co/iP9YDGLp8W pic.twitter.com/PnrW3Id8Dx
">Brutal display of bowling by India 💥
— ICC (@ICC) September 17, 2023
Sri Lanka are all out for 50 in the #AsiaCup2023 Final.
📝: https://t.co/iP9YDGLp8W pic.twitter.com/PnrW3Id8DxBrutal display of bowling by India 💥
— ICC (@ICC) September 17, 2023
Sri Lanka are all out for 50 in the #AsiaCup2023 Final.
📝: https://t.co/iP9YDGLp8W pic.twitter.com/PnrW3Id8Dx
இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றமாக மகேஷ் தீக்ஷனாவுக்கு பதிலாக துஷான் ஹேமந்த சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட இலங்கை அணியின் வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்து மிகவும் பரிதாபமான நிலையை எட்டியது.
பாத்தும் நிஸ்ஸங்க 2, தனஞ்சய டி சில்வா 4, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தசுன் ஷனக ஆகியோர் எவ்வித ரன்களும் எடுக்காமல் வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து இருந்த குசல் மெண்டிஸ் 17 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 50 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
-
Castled! 💥
— BCCI (@BCCI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mohd. Siraj gets his 6⃣th wicket 👏👏
Sri Lanka 33/7 in the 12th over.
Follow the match ▶️ https://t.co/xrKl5d85dN#AsiaCup2023 | #TeamIndia | #INDvSL pic.twitter.com/PqrdOm60Kb
">Castled! 💥
— BCCI (@BCCI) September 17, 2023
Mohd. Siraj gets his 6⃣th wicket 👏👏
Sri Lanka 33/7 in the 12th over.
Follow the match ▶️ https://t.co/xrKl5d85dN#AsiaCup2023 | #TeamIndia | #INDvSL pic.twitter.com/PqrdOm60KbCastled! 💥
— BCCI (@BCCI) September 17, 2023
Mohd. Siraj gets his 6⃣th wicket 👏👏
Sri Lanka 33/7 in the 12th over.
Follow the match ▶️ https://t.co/xrKl5d85dN#AsiaCup2023 | #TeamIndia | #INDvSL pic.twitter.com/PqrdOm60Kb
இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் மட்டும் 6 விக்கெட்டுகளை எடுத்து ஒற்றை ஆளாக இலங்கை அணியை கலங்கடிக்கச் செய்தார். மேலும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. இந்நிலையில் இந்திய அணி 6.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஆசியக் கோப்பையை 8வது முறை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. இஷான் கிஷன் 23 ரன்களும், சுப்மன் கில் 27 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிங்க: Asia Cup Final 2023: இந்தியா - இலங்கை அணிகள் மோதல்!