கொழும்பு: 16ஆவது ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் முன்னேறின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான இறுதி போட்டி நாளை (செப்.17) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது.
இலங்கை அணியை பெறுத்தவரை தொடரின் ஆரம்பம் முதலே அவர்களது அணியில் சூழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இல்லாதது பெரிய இழப்பே. அதே போல் அணியின் நம்பிக்கையாக இருந்த மகீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்த அணியில் இனைந்து பலம் சேர்க்கலாம்.
மேலும், வேகபந்து வீச்சில் மதீஷ பத்திரன இந்த தொடரில் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். சூழல் பந்து வீச்சில் துனித் வெல்லலகே 11 விக்கெட்டுகளை எடுத்து தனது அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பேடிங்கை எடுத்து கொண்டால் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம நல்ல நிலையில் உள்ளனர். மிடில் ஆடரில் கேப்டன் தசுன் ஷனகா இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. அவரது அதிரடியை வெளிப்படுத்தினால், இலங்கை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
இந்தியா அணியை பொறுத்தவரை நேற்று (செப்.15) நடைபெற்ற வங்கதேச அணியுடனான போட்டியில் தேல்வியை தழுவியதற்கு அணியில் செய்த அதிரடியான மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்றய போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்ட விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இறுதி போட்டியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் இந்தியா கண்ட அனைத்து வெற்றிகளுக்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுபவர் சூழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ஏற்கனவே இலங்கை எதிரான போட்டியில் அந்த அணியை கலங்கடிக்கச் செய்தார். அதே போல் நாளைய இறுதி போட்டியிலும் செயல்பட்டால் வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கும் என்றே கூறலாம். வேகப்பந்து வீச்சாளர்களை விட சூழல் பந்து வீச்சாளர்களுக்கே கொழும்பு ஆடுகளம் கைகொடுப்பதால் ஹர்துல் தாக்கூரை விலக்கி, காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையில் இந்திய அணி 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018 என இதுவரை 7 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதே போல் இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022 என 6 முறை கோப்பையை வென்றுள்ளது. மேலும், இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்திய அணி 5 முறையும், இலங்கை அணி 3 முறையும் வெறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட இரு அணிகளுக்கான பிளேயிங் 11:
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(விகீ), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன் அல்லது துஷான் ஹேமந்த, கசுன் ராஜித, மதீஷ பத்திரன.
இதையும் படிங்க: MS Dhoni: தோனி என்னும் சகாப்தம் கேப்டனாக பயணத்தை தொடங்கிய நாள் இன்று!