ETV Bharat / sports

Ashes test: முதல் இன்னிங்ஸில் 263-க்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா ; மிட்செல் மார்ஸ் சதம்! - joe root

ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 60.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

மிட்செல் மார்ஸ்
mitchell marsh
author img

By

Published : Jul 7, 2023, 12:20 PM IST

லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே ஆன ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் வைத்து நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வென்று 2-0 என்ற புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நேற்று மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பெளலிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய வார்னர் 4 ரன்களிலும், கவாஜா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களிலும் வெளியேறினர். அதன் பின் இறங்கிய லபிசன் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களும், ஸ்மித் 1 பவுண்டரியும், 1 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் களம்கண்ட ஹெட் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இதையும் படிங்க: SAFF Championship: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!

விக்கெட்டை இழந்து சரிவைக் கண்ட ஆஸ்திரேலியா அணிக்கு 6ஆவது இடத்தில் களம் இறங்கிய மிட்செல் மார்ஸ் சரிவைத் தடுத்து ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். அவர் 118 பந்துகளில் 17 பவுண்டரிகள், 4 சிக்ஸருடன் 118 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை கிறிஸ் வோக்ஸிடம் பறிகொடுத்தார். அதன்பின் வந்த அலெக்ஸ் கேரி 8 ரன்களும், ஸ்டார்க் 2 ரன்களும், கம்மின்ஸ் 0, மர்ஃபி 13 ரன்களுடன் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 60.4 ஒவர்களில் 263 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து பெளலிங்கில் மார்க் வுட் 5 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களும், ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்களும் எடுத்தனர். இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸை ஸாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடங்கினர். ஆனால், பென் டக்கெட் 2 ரன்களுடன் வெளியேறினார். அதன் பின் இறங்கிய ஹேரி புரூக் 3 ரன்களுடன், மற்றொரு பக்கம் விளையாடி வந்த ஸாக் கிராவ்லி 3 பண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் வந்த ஜே ரூட் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 1 ரன்களுடன் களத்தில் நிற்கின்றனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினர்களுக்கு இவ்வளவு சம்பளமா? இதில் சம்பள உயர்வு வேறையா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.