ETV Bharat / sports

'சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பேட்மிண்டன் வீராங்கனை கொண்டாடப்பட்ட அரிதான நிமிடங்கள் அவை. ஆனால் அந்த நிமிடங்களுக்காக அவர் எட்டு வயது முதல் போராடத் தொடங்கினார்.

womens-day-special-the-extra-ordinary-journey-of-pv-sindhu

author img

By

Published : Mar 4, 2020, 2:20 PM IST

Updated : Mar 4, 2020, 7:50 PM IST

2019 செப்டம்பர் 19ஆம் தேதி உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை பி.வி. சிந்து கைப்பற்றிய சில நிமிடங்களில் இந்தியாவின் பிரதமர் முதல் ஒட்டுமொத்த பொதுமக்களும் வாழ்த்து மழையைப் பொழியத் தொடங்கினர். சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குத் திரும்பியது முதல் பி.வி. சிந்து 53 நேர்காணல்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நேர்காணலும் 10 நிமிடங்கள். கிட்டத்தட்ட 530 கேள்விகளுக்கு பதில் சொல்லியாகிவிட்டது. ஆனால் இவரது குரலைக் கேட்பதற்கு ஊடகமும் பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பேட்மிண்டன் வீராங்கனை கொண்டாடப்பட்ட அரிதான நிமிடங்கள் அவை. ஆனால் அந்த நிமிடங்களுக்காக பி.வி. சிந்து எட்டு வயது முதல் போராடத் தொடங்கினார்.

பிவி சிந்து
பிவி சிந்து

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1995 ஜூலை 5ஆம் ஆண்டு பி.வி. ராமன் - பி. விஜயா இணையருக்குப் பிறந்தவர் புசர்லா வெங்கட் சிந்து. பெற்றோர் இருவருமே சர்வதேச கைப்பந்தாட்ட வீரர்கள் என்பதால் விளையாட்டு மீதான ஆர்வம் பி.வி. சிந்துவுக்கு சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. அதிலும் அவரின் தந்தை ராமன் விளையாட்டின் உயரிய விருதான அர்ஜுனா விருது வாங்கியவர்.

இதனால் பி.வி. சிந்துவும் கைப்பந்தைத்தான் தேர்வுசெய்வார் என பெற்றோர் நினைக்க, அவரோ முன்னாள் பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்தின் ஆட்டத்தைப் பார்த்து பேட்மிண்டன் ராக்கெட்டை தனது ஆயுதமாகத் தேர்ந்தெடுத்தார். அதுவும் எட்டே வயதில்!

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID

சிந்துவின் ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் மெஹ்பூபா அலியிடம் பயிற்சிக்காக அனுப்புகிறார்கள். அவரிடம் அடிப்படைகளைச் சரியாகக் கற்ற சிந்து, யாரைப் பார்த்து ராக்கெட்டை கையில் எடுத்தாரோ அவரிடமே பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார். ஆம், சிறுவயது முதலே கோபிசந்த் அகாதமியில் எதிர்காலத்திற்காகப் பட்டைத் தீட்டப்பட்டவர் பி.வி. சிந்து. அங்கு தொடங்கிய சிந்துவின் பேட்மிண்டன் பயணம் எங்குமே நிற்கவில்லை.

2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதனால் மீண்டும் 2016ஆம் பேட்மிண்டனில் நிச்சயம் பதக்கம் வந்துவிடும் என இந்தியர்கள் நம்பியபோது, யாரும் எதிர்பாராதவிதமாக சாய்னா நேவால் உக்ரேனிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் பேட்மிண்டன் பதக்கக் கனவு தகர்ந்துபோனதாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் 20 வயதே நிறைந்த சிந்து இறுதிப் போட்டிக்குச் சென்று நூலிழையில் தங்கத்தைப் பறிகொடுத்தார்.

ஆனால் 2012ஆம் ஆண்டு கிடைத்த வெண்கலப் பதக்கத்திற்குப் பதிலாக இம்முறை பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வந்தது.

பி.வி. சிந்துவின் கதை

ஒன்பது வயது முதல் தினமும் காலை 3 மணிக்கு எழுந்து 56 கிமீ பயணம்செய்து 4.30 மணி முதல் 7.30 மணி வரை பேட்மிண்டன் பயிற்சி. மீண்டும் 8.30 மணிக்கு பள்ளி சென்று, மாலை மீண்டும் பயிற்சி என சிந்துவின் 11 ஆண்டு போராட்டத்திற்கு பலன் கிடைத்தது.

அதன்பின் ஐந்து ஆண்டுகளாகக் கைகளுக்கு அருகில் வந்து சென்ற உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை கடந்தாண்டு கைப்பற்றி சாதனைப் படைத்தார். அதுவும் கோபிசந்திற்குப் பிறகு இந்திய வீரர், வீராங்கனைகள் யாராலும் கைப்பற்றாத பட்டத்தைக் கைப்பற்றி குருவுக்கு இணையாக இந்தியாவில் வலம்வருகிறார்.

பிவி சிந்து
பிவி சிந்து

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் சில மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், சமீபகாலமாக சிந்துவின் ஆட்டம் பெரிதாக இல்லை என்ற விமர்சனங்களும் எழத்தான் செய்கின்றன.

அவர்களுக்கு ஒரு பதில் மட்டும்தான் கூற முடியும். சாம்பியன் வீரர்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள். கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கைகள், இந்தாண்டு தங்கத்துடன் வரும் என எதிர்பார்ப்போம்.

இந்தியாவில் வீரர்கள் ஃபார்மில் இல்லை என்றால் பெரிதாக விமர்சனங்கள் வராது. ஆனால் வீராங்கனைகள் ஃபார்மில் இல்லை என்றால், மூலைமுடுக்கிலிருந்தும் விமர்சனங்கள் வரும். மூவர்ணக்கொடியை சர்வதேச அரங்கில் பறக்கவைத்த இந்தியாவின் மகள் பி.வி. சிந்து, மீண்டும் தேசியக்கொடியை தலைநிமிர்ந்து பார்க்கவைப்பார் என நம்புவோம்.

இதையும் படிங்க: தோனி நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

Last Updated : Mar 4, 2020, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.