ETV Bharat / sports

பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் சிந்து, சாய்னா, சமீர் வர்மா - சமீர் வர்மா

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா, கிதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

காலிறுதி சுற்றில் சிந்து, சாய்னா, சமீர் வர்மா
author img

By

Published : Apr 11, 2019, 11:34 PM IST

கிதாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வர்மா அசத்தல்:

2019ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியன் சால்பர்க்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கிதாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவிருக்கும் காலிறுதிச் சுற்றில் அவர் முதல் நிலை வீரரான ஜப்பானின் கென்டோ மொமோடாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரர் லூ குவாங்சூவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அவர் சீனதைபேயின் சௌ தியன் சென்-னை எதிர்கொள்ளவுள்ளார்.

காஷ்யப் ஏமாற்றம்:

இந்தத் தொடரில் இரண்டு இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காலிறுதிச் சுற்றில் முன்னேறிய நிலையில், மற்றொரு இந்திய வீரரான பருபலி காஷ்யப், 9-21, 21-15, 16-21 என்ற செட் கணக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி அடைந்தார்.

காலிறுதிச் சுற்றில் சிந்து, சாய்னா:

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிலிச்பெல்ட் உடன் மோதினார். இதில், சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

இதேபோல், நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் போர்ன்பவீ சோசுவோங்கை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Intro:Body:

news

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.