ETV Bharat / sitara

அமேசான் பிரைமில் வெளியாகும் படங்கள் - வெப் சீரிஸ் விவரங்கள் உள்ளே

முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில், பிரைம் தின கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளது.

amazon prime
amazon prime
author img

By

Published : Jul 9, 2021, 10:31 AM IST

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் ஓடிடியின் வரவு அதிகரித்தது. தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

கரோனா ஊரடங்கு முடிந்து கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும், பொதுமக்கள் திரையரங்கு வர ஆர்வம் காட்டாததால் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் பொங்கலன்று வெளியான விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்ததால், வசூலில் வெற்றிபெற்றது.

amazon prime
பிரைம் டே ஷோ

எனினும் சூர்யாவின் 'சூரரை போற்று', விஜய் சேதுபதியின் 'கபெ ரணசிங்கம்', ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிபெற்றன.

ஓடிடி தளங்களின் வரவால் அதிர்ச்சி அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 45 நாட்களுக்குப்பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருந்தாலும் ஓடிடியில் படங்கள் வந்துகொண்டுதான் இருந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திரையரங்குகளை மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக தயாரிப்பாளர்களின் கவனம் மீண்டும் ஓடிடி பக்கம் திரும்பியது. படத்தின் முதலீடு மற்றும் தயாரிப்பாளரின் பணப்பிரச்னை ஆகியவையே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

ஆர்யா நடித்த 'டெடி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த 'ஜகமே தந்திரம்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் ஓடிடியில் வெளியாவதை தனுஷ் விரும்பவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் முடிவால் அதிருப்தி அடைந்தார். மேலும் விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி', நயன்தாராவின் 'நெற்றிக்கண்', ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகிறது.

amazon prime
ஹாஸ்டல் டேஸ்

இந்நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் இன்று (ஜூலை.8) முதல் பிரைம் தினத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்த மாதம் கடைசி வரை புதியப்படங்கள் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.

அந்த வகையில் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழ் - சார்பட்டா பரம்பரை/தெலுங்கு - சார்பட்டா – ஜூலை 22

amazon prime
சார்பட்டா

'சார்பட்டா' என்பது 1970இல் மெட்ராஸின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு தமிழ் விளையாட்டு சார்ந்த படம், அந்தக் காலத்தின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.

டூஃபான் (இந்தி) – ஜூலை 16

amazon prime
டூஃபான்

டூஃபான், ஒரு குத்துச்சண்டை வீரரின் கதையையும், தேசிய அளவிற்கு செல்வதற்கான பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் சொல்கிறது. அசாதாரண சூழ்நிலையில், டோங்ரியின் தெருக்களில் இருந்து பிறந்த ஒரு அனாதை சிறுவன் ஒரு உள்ளூர் ரவுடியாக வளர்கிறான். அவர் சரியான பாதையை எடுக்க வழிகாட்டும் அனன்யா என்ற பிரகாசமான மற்றும் இரக்கமுள்ள ஒரு இளம் பெண்ணை சந்திக்கும் போது அவரது வாழ்க்கை மாறுகிறது.

காதல் வழிகாட்டுதலுடன், அவர் விளையாட்டில் தனது திறமையைக் கண்டுபிடித்து, உலகத் தரம் வாய்ந்த குத்துச்சண்டை வீரராகும் பயணத்தை மேற்கொள்கிறார். இது வாழ்க்கையின் ஒரு எழுச்சியூட்டும் கதை, வாழ்க்கை சூழ்நிலைகளால் தாக்கப்பட்ட ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் கூட சரியான பாதையை பின்பற்றுவதன் மூலம் தேசத்தின் ஹீரோக்களாக எப்படி மாற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கியுள்ள இந்த படம், பாக் மில்கா பாக் படத்திற்குப் பிறகு எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் இயக்குநருக்கு இடையிலான இரண்டாவது படைப்பாகும்.

மாலிக் (மலையாளம்) – ஜூலை 15

amazon prime
மாலிக்

அரசியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'மாலிக்' தனது மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் அதிகாரபூர்வமான சக்திகளுக்கு எதிராக ஒரு புரட்சியை வழிநடத்துகிறார். தனது சமூகத்தின் மக்களிடமிருந்து நிபந்தனையற்ற அன்பையும் விசுவாசத்தையும் பெறும் ஒரு கவர்ந்திழுக்கும் தலைவரான சுலைமான் மாலிக் (ஃபஹத் பாசில்) பயணத்தை விவரிக்கிறது.

வெவ்வேறு கால இடைவெளிகளில், மாலிக் குற்றம், மரணம், என கடந்த காலத்தின் கதை. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.

இக்காட் (கன்னடம்) – ஜூலை 21

amazon prime
இக்காட்

நகைச்சுவை நடிகர் நாகப்சனா, கன்னட பிக் பாஸ் புகழ் பூமி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ளப்படம் இக்காட். பவன் குமார் இப்படத்தை நகைச்சுவை படமாக இயக்கியுள்ளார்.

யூதாஸ் அண்ட் பிளாக் மேசியா – ஜூலை 25

amazon prime
யூதாஸ் & பிளாக் மேசியா

'யூதாஸ் & பிளாக் மேசியா' ஒரு 2021 அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும், இது அதன் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் அசாத்தியமான நடிப்புக்காக நல்ல வரவேற்பைப் பெற்றது.

டாம் அண்ட் ஜெர்ரி – ஜூலை 10

amazon prime
டாம் அண்ட் ஜெர்ரி

உலக புகழ்பெற்ற டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தற்போதையை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் படமாக எடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்திற்கு வரும் டாம் அண்ட் ஜெர்ரி அங்கு சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவை உணர்வுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இணையத்தொடரான ஹாஸ்டல் டேஸ் சீசன் 2 ஜூலை 23ஆம் தேதி வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.