தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்துள்ளது. நிகழ்ச்சியை தமிழில் கமல் ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்குகின்றனர்.
இந்நிலையில் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் ஐந்தாவது சீசன் நேற்று (ஆகஸ்ட் 5) முதல் தொடங்கியது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
போட்டியாளர்கள் பட்டியல்:
- யூ-டியூப் பிரபலம் ஸ்ரீ ஹனுமந்த்
- சீரியல் நடிகர் விஜய்
- நடிகை லஹரி
- பாடகர் ஸ்ரீராமச்சந்திரா
- நடன கலைஞர் அனீ
- முகமது கய்யும் (எ) லோபோ
- நடிகை ப்ரியா
- மாடல் ஜெஸ்ஸி
- நடிகை ப்ரியங்கா சிங்
- யூ-டியூப் பிரபலம் ஷண்முக்
- நடிகை ஹமீதா
- நடன கலைஞர் நடராஜ்
- நடிகை சராயு
- நடிகர் விஷ்வா
- நடிகை உமா தேவி
- நடிகர் மானஸ்
- RJ காஜல்
- நடிகை ஸ்வேதா வர்மா
- நடிகை ரவி
பொதுவாக தெலுங்கு பிக்பாஸ் தொடங்கிய இரண்டு வாரங்களில், தமிழ் பிக்பாஸ் தொடங்குவது வழக்கம் என்பதால்; இன்னும் இரண்டு வாரங்களில் தமிழில் பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.