ஊரடங்கு காலத்தில் OTTயில் மூன்று படங்கள் வெளியாகும் நிலையில் அது தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு வாய்த்தகராறை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திரைப் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகையுமான பூஜா பட் ட்விட்டரில், “மொட்டைத் தலையுடன் இருக்கும் இருவர் ஒரு சீப்புக்காக சண்டையிடுவதை போன்று தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் சண்டை உள்ளது. இதற்கிடையே உள்ள பார்வையாளர்கள் எங்கே? உண்மை கசக்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.
இந்தப் பதிவை தொடர்ந்து நெட்டிசன்கள் அந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவான 'குலாபோ சித்தாபோ' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாவதைத் தொடர்ந்து இந்த வாய்த்தகராறு அரங்கேறி வருகிறது.
இதற்கு ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் தனது அதிருப்தியும் ஏமாற்றத்தையும் பதிவு செய்திருந்தது. வித்யா பாலன் நடிப்பில் உருவான 'சகுந்தலா தேவி' திரைப்படமும் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.