ETV Bharat / sitara

‘I am a தமிழ் பேசும் இந்தியன்’ - சமூக வலைதளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்...! - சமூக வலைத்தளத்தில் பட்டைய கிளப்பும் யுவனின் புதிய அவதாரம்

தமிழ் திரை உலகில் பலர் தற்போது இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த ட்ரெண்டில் இறங்கி உள்ளனர்.

yuvan shankar t shirt
yuvan shankar t shirt
author img

By

Published : Sep 5, 2020, 10:59 PM IST

சென்னை விமான நிலையில் திமுக எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எஃப் அலுவலர், ‘இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா’ என்று கேள்வி எழுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகம் நடத்திய கூட்டத்தில், ‘இந்தி தெரியாததால் தமிழக மருத்துவர்களை வெளியேற சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, ‘I am a தமிழ் பேசும் indian’ என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்துள்ளார். அவர், அருகில் இருக்கும் மெட்ரோ படத்தின் நடிகர், ‘ஹிந்தி தெரியாது போடா..’ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்துள்ளார். இந்தப் புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க...வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதான பிக்பாஸ் போட்டியாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.