ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள 'ஏலே' படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் 'முத்துகுட்டி' என்னும் கலகலப்பான மனிதராக நடிக்கிறார்.
இப்படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக படத்தில் வரும் முத்துகுட்டி கதாபாத்திர தோரணையில், மக்கள் கூட்டமாக இருக்கும் திருத்தணி முருகன் கோயில் முன்னால் 'ஏலே' ஐஸ் வண்டியில் சமுத்திரக்கனி 'குச்சி ஐஸ்' விற்பனை செய்துள்ளார்.
![yelay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-samuthirakani-yelay-script-7205221_29012021154029_2901f_1611915029_919.jpg)
நகரம் முழுதும் முருக கடவுளின் தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்தில் குழுமியிருக்க, மக்களுக்குப் படத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொண்டுசெல்லும் பொருட்டு படக்குழு இவ்விடத்தை தேர்ந்தெடுத்து இந்த விளம்பரத்தினைச் செய்துள்ளது. சமுத்திரக்கனி ஐஸ் விற்பதைக் கண்டு ஆச்சரியத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர்.
நடிகர் சமுத்திரக்கனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள், சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.
![yelay](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-samuthirakani-yelay-script-7205221_29012021154029_2901f_1611915029_617.jpg)
சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்குகிறது.