ETV Bharat / sitara

காமதிபுரா இணையத்தொடர் ஏன் வெளியாகவில்லை? மீரா சோப்ரா விளக்கம் - Meera Chopra

காமதிபுரா இணையத்தொடர் ஏன் இன்று (மார்ச் 8) வெளியாகவில்லை என்பது குறித்து நடிகை மீரா சோப்ரா ட்வீட் செய்துள்ளார்.

காமதிபுரா
காமதிபுரா
author img

By

Published : Mar 8, 2021, 9:48 PM IST

மீரா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள இணையத்தொடர் காமதிபுரா. மும்பையில் நடைபெற்ற கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இதில் அவர் காவலராக நடித்துள்ளார்.

ஏழு தொடராக உருவாகியுள்ள இந்த இணையத்தொடர் இன்று (மார்ச் 8) ஹாட் ஸ்டார் டிஸ்னி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி இன்று காமதிபுரா இணையத்தொடர் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை மீரா சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காமதிபுரா இணையத்தொடர் வெளியாகாதது குறித்து பலரும் என்னிடம் கேட்டுவருகிறீர்கள். இந்த இணையத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் புதிய கொள்கைகளைப் பின்பற்றுகிறது. அதனால்தான் ’காமதிபுரா’ வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காக்கிச்சட்டையில் யாஷிகா ஆனந்த் - 'சல்பர்' ஃபர்ஸ்ட் லுக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.