தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் 'சாகாப்தம்', 'மதுரவீரன்' என சில படங்களில் நடித்துள்ளார். மூத்த மகன் விஜயபிரபாகரன் தேமுதிகவின் அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது முதல் முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார். இப்பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.
இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜயபிரபாகரன் முதல் முறையாக பாடிய, தனி இசைப்பாடலின் (Independent Music) First look மாலை 5.40 மணிக்கு எனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மத்திய பிரதேசத்தில் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடக்கம்!