ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ”சாயம்”. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம், கிறிஸ்டோபர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.
சாதி சாயத்தால் திசைமாறும் வாழ்க்கை
முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேப்பில் இன்று (செப். 11) நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேடையில் கால் போடும் நயன்தாரா
இந்நிலையில், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக படத்தின் கதாநாயகன் விஜய் விஷ்வா பேசுகையில், “பல போராட்டங்களின் நடுவே இந்த திரைப்படம் முடிக்கப்பட்டு இன்று (செப்.11) இசை வெளியீட்டிற்கு வந்துள்ளது. விரைவிலேயே திரைக்குவர இருக்கிறது.
ஜாதியை பேசக்கூடாது என இந்த படம் பேசும். சிலர் தங்களுடைய பெயருக்கு பின்னால் ஜாதியை இணைத்துள்ளனர். அது முற்றிலும் தவறானது. அனைவரும் ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்த படம் நிச்சயமாக குரல்கொடுக்கும் என தெரிவித்தார்.
இந்தப் படத்தின் கதாநாயகி மேடையில் கால் மீது கால்போட்டு அமர்ந்திருப்பதை கண்ட விஜய் விஷ்வா, நடிகை நயன்தாராவாகவே இருந்தாலும் மேடையில் கால் மீது கால்போட்டு அமர்வதை தவிர்க்க வேண்டும். அது பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றார்.
இதையும் படிங்க: ரம்யா பாண்டியனின் புது பட அப்டேட் வெளியீடு!