ETV Bharat / sitara

ராஷ்மிகாவுடன் லிப் டூ கிஸ் அடிக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா
author img

By

Published : Mar 17, 2019, 1:52 PM IST

'பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் தனக்கென்று ஒரு தனிப்பாணியை கடைப்பிடித்து வந்தாலும் 'அர்ஜீன் ரெட்டி' படம்தான் அவரை இந்தியா முழுவதும் பிரபலமடைய வைத்தது. காதல் தோல்வி, கோபம், தேவதாஸ் வாழ்க்கை என மூன்று விதமான பரிணாமத்தில் அர்ஜீன் ரெட்டியாகவே விஜய் தேவரகொண்டா வாழ்ந்திருப்பார்.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை படமான 'மகா நடி' படத்திலும் விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, இவர் நடித்த 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸி வாலா' ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அதுவும் கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம் காவாலே' பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கிவருகிறது. 'கீதா கோவிந்தம்' படம் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இந்த பாடலை ரசிகர்கள் தங்களது போன்களில் ரிங்டோனாக ஒலிக்க வைத்து பலரையும் பரவசப்படுத்துகின்றனர்.

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்துள்ள விஜய் தேவரகொண்டா தற்போது 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். பரத் கம்மா எழுதி இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.

கீதா கோவிந்தத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா 'டியர் காம்ரேட்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 'டியர் காம்ரேட்' படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது வெளியாகியுள்ளது. நான்கு மொழிகளில் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் டீசர் ஒரு பக்கம் சண்டை காட்சி, மறுபக்கம் காதல் ரொமான்ஸ் முத்தம் என பார்ப்பவரை மெய்சிலிர்க்கவைக்கிறது.

Intro:Body:

sites

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.