ETV Bharat / sitara

ஜெட் வேகத்தில் படப்பிடிப்பை முடிக்கும் சிம்பு - latest kollywood news

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு
சிம்பு
author img

By

Published : Sep 21, 2021, 4:07 PM IST

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகியப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி புதிய படத்தில் இணைகின்றனர்.

ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்புவின் 47ஆவது படமான இதற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடையை இப்படத்திற்காக குறைத்து சிம்பு அசத்தி இருக்கிறார்.

கடந்த மாதம் திருநெல்வேலியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அடேங்கப்பா 14 வாரங்களுக்கு இவ்வளவு கோடியா? சல்மானின் சம்பளம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.