நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே படத்தின் வேற மாறி, அம்மா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் வலிமை படத்திலிருந்து விசில் தீம் இன்று (டிசம்பர் 22) மாலை 3.30 மணிக்கு ரிலீசாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தில் ஹூமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசில் தீம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாத்தி ரெய்டு... மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் தொடரும் சோதனை