ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் வலிமை. இதில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சி வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அப்பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடு சென்று சண்டைக்காட்சி எடுக்கப் படக்குழு தயாராகிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சண்டைக் காட்சியுடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் டான் படப்பிடிப்பு எப்போது?