இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'நேர்கொண்ட பார்வை'க்குப் பிறகு, மீண்டும் அவரது இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வருகிற 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏகப்பட்ட தடைகளுக்கு பிறகு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித்தின் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் சில நாள்களுக்கு முன்பு வெளியானது.
அஜித்தின் அசாதாரணமான உழைப்பும், பைக் ஸ்டண்ட்களும் ரசிகர்களை மெய்சிலிர்க்கவைத்தது. இதனையடுத்து, வெளியான அந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது ஒரு மில்லியன் லைக்குகளைக் குவித்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
மேலும், பிப்ரவரி 24 அன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இதையும் படிங்க:FIR படத்தை தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி புகார்