சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இத்திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேற்று நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கான பூஜை நடைபெற்று முடிந்த நிலையில், இத்திரைப்படத்துக்கான மோஷன் போஸ்டர் இன்று (டிசம்பர் 10) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்த மோஷன் போஸ்டரில் வடிவேலு நாய்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்வது போல கலர்ஃபுல்லாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்தவாரம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், 'கம் பேக் காமெடி கிங்' என அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் ரகுமான் மகள் திருமண விழா: ஸ்டாலின் பங்கேற்பு!