சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இத்திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக லண்டன் சென்றிருந்த வடிவேலு, அங்கு 10 நாள்கள் தங்கியிருந்தார். லண்டன் சென்று திரும்பிய அவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, வடிவேலு கடந்த டிசம்பர் 23ஆம் தேதி, இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏறத்தாழ ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்த வடிவேலு, முழுமையாக குணமடைந்துவிட்டதாக ராமசந்திரா மருத்துவமனை அறிவித்துள்ளது. இந்நிலையில், அவர் இன்று (ஜன. 1) வீடு திரும்பியுள்ளார். வடிவேலு குணமடைந்துவிட்டதால், ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
இதையும் படிங்க: STR New Year Wish 2022: `உங்களில் ஒருவன் - சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து