ETV Bharat / sitara

'மிஸ் சென்னை' வென்ற புகைப்படத்தை பதிவிட்ட த்ரிஷா - திரிஷாவின் லேட்டஸ்ட் செய்திகள்

சென்னை: 'மிஸ் சென்னை' பட்டம் வென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரிஷா
திரிஷா
author img

By

Published : Sep 30, 2020, 3:11 PM IST

சூர்யாவுக்கு ஜோடியாக 'மெளனம் பேசியதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் நாயகியாக சினிமா உலகை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ் பெண்ணாக இந்த வளர்ச்சியை பெற்றிருப்பது சக நடிகைகளையும் வியக்க வைத்துள்ளது. வெற்றிகளை விட தோல்விகளை சந்தித்து வந்த த்ரிஷாவிற்கு 96 திரைப்படம் அவரது சினிமா கெரியரில் பெரிய திருப்புமுனையை தந்தது. தமிழில் த்ரிஷா 'பரமபதம் விளையாட்டு', 'ராங்கி', 'பொன்னியின் செல்வன்', உள்ளிட்ட படங்களிலும் மலையாளத்தில் ஒரு புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

மிஸ் சென்னை பட்டத்துடன் திரிஷா
மிஸ் சென்னை பட்டத்துடன் த்ரிஷா
த்ரிஷா சினிமாக்களில் நடிப்பது தவிர பீட்டா, யுனிசெஃப் போன்ற சமூக அமைப்புகளிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி மிஸ் சென்னை பட்டத்தை த்ரிஷா பெற்றிருந்தார். அப்போது தலையில் கிரீடம் உடன் எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தை த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் தற்போது அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.