மலையாள திரையுலகின் பிரபலமான நடிகரான டொவினோ தாமஸ், தமிழில் தனுஷின் மாரி 2 படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியுடன் இணைந்து உலவிரவு பாடலிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து ஒருபக்கம் படங்களில் கவனம் செலுத்தி வரும் டொவினோ தாமஸ் மறுபக்கம் ஒர்க்-அவுட் செய்ய தவறுவது இல்லை.
அந்தவகையில் அவர் தனது தந்தையுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது அப்பா, எனது ஆலோசகர், உற்சாகப்படுத்துபவர், முடிவுகளை எடுப்பவர் மற்றும் ஒர்க்- அவுட் பார்ட்னர்" என்று குறிப்பிட்டுள்ளார். இருவரும் செம ஃபிட்டாக இருக்கும் இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.