ராஜரிஷி இயக்கத்தில் காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் காளையப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மதுரை மணிக்குறவன்'. மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இதில் ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
மாதவிலதா கதாநாயகியாக நடிக்க அவருடன் இணைந்து காளையப்பன், சுமன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
![மதுரை மணிக்குறவன் பட பாடல்களை வெளியிட்ட இளையராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-07-madurai-ilayaraja-script-7205221_12042021185209_1204f_1618233729_56.jpg)
இந்நிலையில், ‘மதுரை மணிக்குறவன்' படத்தின் பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா வெளியிட்டுள்ளார். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்களும், 8 சண்டை காட்சிகளும் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அது வெறும் நடிப்பு திட்டாதீங்கப்பா முடியல: 'கண்ணபிரான்' நட்டி