நெல்சன் திலிப்குமார் - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாஸ்டர்’ படத்துக்கு பிறகு முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா அல்லது மகிழ் திருமேணி ஆகிய இயக்குநர்களில் ஒருவர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் திடீரென அந்த வாய்ப்பை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமாருக்கு வழங்கினார்.
விஜய்யின் 65ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்று நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளையொட்டி வரும் ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y
— Sun Pictures (@sunpictures) June 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y
— Sun Pictures (@sunpictures) June 18, 2021Enna nanba? First look ah? #Thalapathy65FLon21st #Thalapathy65FirstLook @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/11buRhwU3Y
— Sun Pictures (@sunpictures) June 18, 2021
இதையும் படிங்க: தளபதி பிறந்தநாள்: மாஸ்டர் டீம் வெளியிட்ட மாஸ் போஸ்டர்