நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தில் ஹூமாகுரோசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, போனிகபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் வலிமை படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் வலிமை படத்தை வெளியிடும் உரிமையை ஹம்சினி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும், இதுவரை வெளியான அஜித் படங்களையெல்லாம் விட வலிமை படம் அதிகப்படியான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
தற்போது, 'வலிமை' திரைப்படம் 2021 ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும், படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இது எந்த இடம்? ஒத்த ஆளாக கெத்து காட்டிய அஜித்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!