ETV Bharat / sitara

'96' ஜானுவாக மாறிய 'ஓபேபி' சமந்தா - வைரலாகும் புகைப்படம்! - samantha picture

தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் சமந்தாவின் அழகிய புகைப்படம் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

samantha
author img

By

Published : Jul 21, 2019, 10:51 PM IST

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த '96' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. ஆனால் அதில் ஒரு சில படங்கள் தான் ரசிகர்களின் மனதில் இடம்பெறுகிறது. அப்படிப்பட்ட காதல் காவியமான படம்தான் 96. இப்படம் காதலர்களை கொண்டாட வைத்தது. 35 - 45 வயது உடையவர்களை தனது முதல் காதலை தேடி அலைய வைத்தது. பள்ளி பருவத்தில் வரும் ஒவ்வொரு காட்சியை கண்டு கண் கலங்காதவர்கள் எவரும் இல்லை.

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக்கானது. கன்னட ரீமேக்கில் திரிஷா கதாப்பாத்திரத்தில் நடித்த பாவனாவின் நடிப்பு பேசப்பட்டது. தெலுங்கில் 96 ஆக ரீமேக் ஆகும் இப்படத்தில் சர்வானந்த், சமந்தா நடித்து வருகின்றனர். இப்படத்தை தமிழில் இயக்கிய பிரேம்குமாரே இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திரிஷா அணிந்த அதே மஞ்சள் சுடிதாரில் சமந்தாவின் அழகிய புகைப்படம் லீக்காகியுள்ளது.

சமந்தா
சமந்தா

இதில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து சமந்தா வெளிவருவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவை 'ஐ லவ் யூ ஜானு' என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். சந்திரமுகி ஸ்டைலில், 'முழுசா ஜானுவாக மாறிய சமந்தாவை பார்' என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத சமந்தாவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Intro:Body:

Samantha in 96

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.