’ஒரு அடார் லவ்’ திரைப்படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். இதையடுத்து அவர் தற்போது பாலிவுட்டில் உருவாகியுள்ள ’ஸ்ரீதேவி பங்களா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரசாந்த் மாம்புல்லி இயக்கியுள்ள இதில் அர்பாஸ் கான், பிரியாம்ஷு சாட்டர்ஜி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது மூன்றாவது ட்ரெய்லரை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு காட்சிகளில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் நிர்வாண கோலத்தில் தோன்றியுள்ளதால் அது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நவாசுதீன் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு பொய்: ஷமாஸ் சித்திக்