சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற பாரதிராஜாவின் குரலுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
கோடம்பாக்கம் அனைத்து மொழி நடிகர்களுக்கும் தன் வாசல் கதவை திறந்தே வைத்திருக்கிறது. வேறு மாநிலத்தில் இருந்து இங்கு வந்து கோலோச்சிய நடிகர்கள் ஏராளம். நடிகர்களின் ஒற்றுமையை காட்டும் வகையில் நமது நடிகர் சங்கம் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பெயரை மாற்றி தமிழ் நடிகர் சங்கம் என வைப்பதே சரி என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். அதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்தார்.
தற்போது பாரதிராஜாவின் குரலுக்கு ஆதரவு பெருகிவருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். #WeNeed_TamilActorsAssociation என்ற ஹேஷ்டேக்கில் இதற்கு ஆதரவாக பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ் ராஜ் நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தால் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் விரைவில் தமிழ் நடிகர் சங்கமாக மாறலாம்.
இதையும் படிங்க: எப்படி இருக்கும் ரஜினி - விக்னேஷ் காம்போ!