தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்தவர் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். இவர் கதாநாயகனாகவும், சிறந்த பாடகராகவும் திகழ்ந்தார். ரசிகர்களால் செல்லமாக எம்.டி.கே என அழைக்கப்பட்டார். இவரது நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படம் மாபெரும் வரலாற்றை படைத்தது. பாகவதரின் இசைவளம் செறிந்த குரல் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது.
![தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-artistunion-mkthiyagarajabhagavathar-7204954_24072019173513_2407f_1563969913_282.jpeg)
இந்நிலையில், சனிக்கிழமையன்று கூடிய சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் திருச்சியில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றியும், வாழ்த்துகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.