சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் டான் படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
டாக்டர் படத்தை முடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதேபோல் நடிகர் சூரி, சமுத்திரகனி ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
டான் படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தனது எஸ்.கே. புரொடக்ஷன் சார்பில் தயாரித்து, நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்த 'வாலி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே. சூர்யா, விஜய்யை வைத்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
நியூ படம் மூலம் நடிகராக களமிறங்கி நடிப்பில் கலக்கிய எஸ்.ஜே. சூர்யா, தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் தோன்றினார். தற்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து வரும் இவர், சிவகார்த்திகேயன் படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் தோன்றவுள்ளாராம்.
இதையும் படிங்க: புதிய ஸ்டூடியோவில் இசையமைப்பு பணிகளைத் தொடங்கிய இளையராஜா