சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 128 கலைஞர்களுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(பிப்.20) வழங்கினார். விருதுகளை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், "இது எனக்கு மகிழ்ச்சியான தருணம், மக்கள் அனைவருக்கும் நன்றி, என்னுடைய அப்பா அம்மாவுக்கும் நன்றி. இன்னும் நிறைய நல்ல படங்கள் நடிக்க உள்ளேன்.
மக்கள் பிரதிநிதியாக வர எனக்கு ஆசை இல்லை. ஆனால், இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன். சமுதாய பிரச்னையை படங்களில் பேசுகிறேன், சில பிரச்னை நேரில் பேசி வருகிறேன். அரசியலில் ஈடுபட வாய்ப்பு இல்லை. முதல் முறையாக கோட்டைக்குள் வந்தது மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலைமாமணி விருதுகளை வழங்கிய முதலமைச்சர்