ETV Bharat / sitara

‘பீஸ்ட்’ படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் கொண்டாட்டம்

author img

By

Published : Aug 11, 2021, 8:20 PM IST

நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Beast movie
Beast movie

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேசன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ என்ற பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் கூர்கா, நம்மவீட்டு பிள்ளை, ஆதித்யா வர்மா, டாக்டர் ஆகிய படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுகிறார் என்ற தகவலால் விஜய் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய்யை தொடர்ந்து தனுஷும் சொகுசு காருக்கு வரி செலுத்தினார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.