ETV Bharat / sitara

குழுவினருடன் கலகலப்பான 'டான்' சிவகார்த்திகேயன்: வெளியான புகைப்படங்கள்!

author img

By

Published : Aug 7, 2021, 9:22 PM IST

'டான்' படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகைகள் பிரியா மோகன், சிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

Don
Don

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டுக்காக இப்படம் காத்துள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குநர் சி.பி.சக்கரவர்த்தி இயக்கிவரும், 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதில் பிரியங்கா மோகன், யோகிபாபு, சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பாலா சரவணன், சிவாங்கி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டான் படத்தை லைக்கா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்சன் இணைந்து தயாரிக்கிறது.

'டான்' படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாக நடைபெற்றது. இதனையடுத்து தற்போது, 'டான்' படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில், டான் படப்பிடிப்பிற்கு இடையில், நடிகைகள், பிரியங்கா மோகன், சிவாங்கி, நடிகர் பாலா சரணவனுடன் எடுத்துகொண்ட குழு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 'டாக்டர்' இயக்குநரிடம் 'தளபதி 65' அப்டேட் கேட்ட 'டான்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.