நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ’மாநாடு’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது. சிம்பு தற்போது இயக்குநர் சுசீந்திரன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார்.
சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. இப்படத்துக்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
இப்படத்தை 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தை தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக திரு பணியாற்ற, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன் பணியாற்றி வருகிறார்.
இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.