ட்விட்டரில் எப்போதும் சமூக கருத்துகளைப் பதிவிடுவதிலும், சமூகப்பிரச்னைகளுக்கு எதிராக குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதிலும் முக்கியமானவர், நடிகர் சித்தார்த்.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக, டெல்லியில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம், கரோனா இரண்டாவது அலையின்போது நிலவிய தடுப்பூசித் தட்டுப்பாடு, ஊரடங்கில் மக்கள் பட்ட துயர் ஆகியவை குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பேசி வருகிறார், நடிகர் சித்தார்த்.
இதனாலேயே அண்மையில் பாஜகவினர் சிலர், இவரது குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து சித்தார்த்துக்கு நிகழும் அவலம்
அதுமட்டுமின்றி, தனது ட்விட்டர் பக்கம் 5 முறை ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய ட்வீட்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் சித்தார்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 02) பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும்போது பலர், தமிழ் நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இரங்கல் தெரிவித்தனர்.
-
Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021Targetted hate and harassment. What have we been reduced to? pic.twitter.com/61rgN88khF
— Siddharth (@Actor_Siddharth) September 2, 2021
இந்நிலையில், தனது புகைப்படம் தவறாகப் பகிரப்பட்டதற்கு நடிகர் சித்தார்த் கொந்தளித்துள்ளார்.
இதுகுறித்து தன் வழக்கமான பாணியில், ட்விட்டரில் கருத்துப்பதிவிட்டுள்ள சித்தார்த், 'இப்படி குறிவைத்து சிலர் வெறுப்பைக் காட்டுகின்றனர்.
அந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டோம் நாம்' எனக்கூறி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வாறு பகிர்ந்த நபரையும் கண்டித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்தப்பதிவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
இதையும் படிங்க: ’நான் இறந்துவிட்டேனா...’ சித்தார்த் கொடுத்த ஷாக்கான ரியாக்ஷன்!