நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாநாடு'. இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் இன்று (நவம்பர் 9) தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் பிரபலங்கள், தொழிலாளர்களுக்கு சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் மருந்துகள் (கஷாயம்), ஆரோக்கியமான உணவு வழங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் படக்குழவினரை கரோனா தொற்று பாதிக்கமால் இருக்க முடியும் என படக்குழு கருதுகிறது.