ETV Bharat / sitara

கருப்பு உடையில் கலக்கல் நடனமாடிய சாயிஷா!

author img

By

Published : May 9, 2020, 8:25 PM IST

நடிகை சாயிஷா, ஜெனிஃபர் லோபஸ் பாடியப் பாடலுக்கு நடனமாடியதைத் தொடர்நது, தற்போது புதிய நடன வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சாயிஷா
சாயிஷா

தமிழில் 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. இவர், திரைப்பாடல்களில் தனது வித்தியாசமான நடன அசைவினால் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். கரோனா அச்சம் காரணமாக, அனைத்து விதப் படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வீட்டில் இருந்துக் கொண்டே சாயிஷா, தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் பிரபல பாடகியும், டான்சருமான ஜெனிஃபர் லோபஸ் ஆல்பத்தில் இருந்து அவரைப் போலவே நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய நடன வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கருப்பு நிற ஆடையில் ’senorita’ பாடலுக்கு, மிகவும் ஸ்டைலாக நடனமாடியுள்ளார். அதில் ’இதயத்தில் இருந்து நடனமாடியதை இங்கு முக்கியமா கவனிக்கவேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த வீடியோ, தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வெறித்தனமாக இசையமைத்த மாற்றுத்திறனாளி: வியந்த அனிருத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.