சென்னை : கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு காதல் செய்வீர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
கன்ட கென்டதி என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். பூரி ஜெகன்நாத் இயக்கிய புஜ்ஜிகடு தெலுங்குத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் இவர் பெற்றார்.
இவர் தமிழில் முன்னனி நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார்.
இவர் சுமார் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். இவரின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.