இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துவருகிறது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் எனத் திரையுலகினர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அந்தவகையில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதிமுதல் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு நடித்தி முடிக்கவும், அதில் ஆலியா பட் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிவருகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் முக்கிய கதாநாயகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இதையும் படிங்க: பிகினி உடையில் ஆண் நண்பருடன் விளையாடும் ஜான்வி