ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'தர்பார்'. 'சர்கார்' படத்திற்கு பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது.
![rajini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4607315_darbar.jpg)
இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ’தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகிவந்தன.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவெளியில் ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'இப்போ தளபதி...அடுத்து சூப்பர் ஸ்டார்' - மோத தயாராகும் கார்த்தி!