ETV Bharat / sitara

ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு - தலைவர் 167

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார்
author img

By

Published : Apr 9, 2019, 6:06 PM IST

Updated : Apr 9, 2019, 7:52 PM IST

நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘தர்பார்’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்குகிறது. இதற்காக ரஜினி மும்பை செல்ல இருக்கிறார்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் உருவாக்கி வரும் கதையை ரஜினியிடம் கூறியதாகவும், ‘தர்பார்’ படம் முடிந்த பிறகு ஒப்பந்தம் செய்யலாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கே.எஸ்.ரவிக்குமாரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயங்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினியின் 168வது படமாக இருக்கும்.

ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்த் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் வெளியான முத்து, படையப்பா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மெகா ஹிட் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார் திடீர் சந்திப்பு. ரஜினியின் 168 வது படம் குறித்து ஆலோசனை.

ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கான ஷூட்டிங் நாளை மும்பையில் தொடங்க உள்ள நிலையில் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று  நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார் .

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் கே எஸ் ரவிக்குமார் உருவாக்கிவரும் கதை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,  ‘தர்பார்’ படம் முடிந்த பிறகு கேஎஸ் ரவிக்குமாரின் கதையை ஒப்பந்தம் செய்யலாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று இன்று காலை கே.எஸ் ரவிக்குமாரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் ரஜினியை சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 9, 2019, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.