காதலர் தினமான இன்று (பிப். 14) பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர்.
இன்று (பிப். 14) வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் ‘செய் உன் அங்கெலோ? தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி?’ என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடிவருகின்றனர்.
இக்காணொலி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ‘ராதே ஷியாம்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு