ஓடிடி தளங்கள் அதிகமான பிறகு ஆந்தாலஜி படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் புத்தம் புது காலை.
ஐந்து இயக்குநர்கள், ஐந்து வித்தியாசமான கதைகளாக இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது 'புத்தம் புது காலை விடியாதா' என பெயரிடப்பட்டுள்ள ஆந்தாலஜி படம் அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ரிச்சார்ட் ஆன்டனி, மதுமிதா, ஹலிதா ஷமீம், சூரிய கிருஷ்ணா ஆகியோர் ஐந்து வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
இதில் நதியா, அர்ஜுன் தாஸ், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, லிஜோமோல் ஜோஸ், கௌரி கிஷன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், மணிகண்டன், அன்பு தாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல' - சுரேஷ் காமாட்சி ட்வீட்!