வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.
இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, திரை வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இதற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லரில், 'யுவர் டைம் ஸ்டார்ட் அகைன்' என சிம்பு பேசுவதிலிருந்து தொடங்கி எஸ்.ஜே. சூர்யா, 'வந்தான்...சுட்டான்...போனான்...ரிபீட்' என முடிந்தது.
இதில் எஸ்.ஜே சூர்யா பேசிய 'வந்தான்...சுட்டான்...போனான்...ரிபீட்' என்னும் வசனம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றதுடன் மீம்ஸ்களாகவும் வலம் வந்தது.
தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாக இருந்த 'மாநாடு' திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படம் நவம்பர் 25ஆம் தேதி வரவிருந்தது.
-
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்
">நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்
இந்நிலையில், தற்போது மாநாடு படத்தின் திரையிடல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில், " நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.
தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.