ETV Bharat / sitara

'வலிமை' திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம் - போனி கபூர்! - valimai release

'வலிமை' திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரம்மாண்ட வெளியீடுகளின் தொடங்கமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

’வலிமை’ திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம் - தயாரிப்பாளர் போனி கபூர்!

author img

By

Published : Feb 20, 2022, 5:33 PM IST

உலகம் முழுவதும் இருந்த கடுமையான லாக்டவுன் மற்றும் நோய்த்தொற்று நெருக்கடி காலத்திலும், நடிகர் அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுவதும் 'வலிமை' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. அஜித்குமாரின் கண்கவர் திரை ஆளுமை, உயர் தொழில்நுட்பம், மற்றும் காட்சி துணுக்களில் இருந்த அதிரடி ஆக்சன் ஆகியவை படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

4 மொழிகளில் வெளியாகிறது

இந்தப் படத்தை Zee Studios மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், "வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரம்மாண்ட வெளியீடுகளின் தொடங்கமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான தருணங்கள், சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அஜித்குமார் மற்றும் பிற நடிகர்களின் அற்புதமான நடிப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு குடும்பத்தைப் போல உழைத்துள்ளோம்

அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலைசிறந்தவர். தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.

படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க அவர் பெரும் ஆதரவாக இருந்தார். 'வலிமை' படத்தில் இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட், அவர் தனது பார்வையை அடைய எந்த எல்லைக்கும் செல்வார், அதேவேளையில் தயாரிப்பாளர் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார்.

இந்த கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க, ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர் அவர்களுக்கு நன்றி”எனத் தெரிவித்தார்.

வலிமை படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்ட போதிலும், போனி கபூர் அதனை முழுவதுமாக தவிர்த்துவிட்டார்.

'வலிமை' திரையரங்கிற்கானத் திரைப்படம்

மேலும் அவர் கூறும்போது, “வலிமை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை திறந்துள்ளன, ஆனால் 'வலிமை' போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது.

இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும் என்றார். அஜித்குமார் நடித்திருக்கும் 'வலிமை' திரைப்படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதையும் படிங்க:இளையராஜா வரிகளைப் பாடும் யுவன்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.