நடிகர் ராகவா லாரன்ஸ் கடைசியாக இந்தியில் ’லட்சுமி பாம்’ திரைப்படத்தை இயக்கினார். அதைத்தொடர்ந்து தற்போது ’சந்திரமுகி 2’, ’ருத்ரன்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் ’ருத்ரன்’ படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணியாற்ற, படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் ’ருத்ரன்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இன்று (டிச.31) பிரியா பவானி சங்கரின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா பவானி சங்கர் ஏற்கனவே ’இந்தியன் 2’, ’குருதி ஆட்டம்’, ’பொம்மை’, ’ஓமணப்பெண்ணே’, ’பத்து தல’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சிம்பு படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்!