ETV Bharat / sitara

இன்று வெளியாகும் 'பிரித்விராஜ்' பட டிரெய்லர் - இன்று வெளியாகும் பிரித்விராஜ் பட டிரெய்லர்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் மனு வாரியர் இயக்கியுள்ள 'குருதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.

author img

By

Published : Aug 4, 2021, 7:56 AM IST

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான பரித்விராஜ், தற்போது தான் இயக்கி வரும் இரண்டாவது படமான 'ப்ரோ டாடி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய முதல் படமான 'லூசிபர்' பெரும் வெற்றி பெற்றது. ஆக்சன் படமான லூசிபரில் மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில், மனு வாரியர் இயக்கத்தில் பிரித்விராஜ், மேத்யூ, ஸ்ரிண்டா, முரளி கோபி ஆகியோர் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'குருதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஆக.04) வெளியாகிறது. இதனை பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ்
பிரித்விராஜின் கோல்ட் கேஸ்

முன்னதாக பிரித்விராஜ் நடித்த கோல்ட் கேஸ் படமும் அமேசான் தளத்திலேயே வெளியாகி இருந்தது. இந்நிலையில், அமேசான் ஓடிடி தளத்தில் அவரது அடுத்த படமான 'குருதி' வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

திரில்லர் பாணி படமான கோல்ட் கேஸ் போலவே குருதி படமும் திரில்லர் கதையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரித்விராஜின் ரசிகர்கள் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இதையும் படிங்க: கைதாகிறாரா யாஷிகா ஆனந்த்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.