தென் கொரியாவை சேர்ந்த இயக்குநர் போங் ஜோன் ஹோ இயக்கியுள்ள படம் 'பாராஸைட்'. இந்த திரைப்படம் ஹாலிவுட் திருவிழாவான ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. 92 வருட ஆஸ்கர் விழாவில் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழித்திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றது இதுவே முதல் முறை.
இந்நிலையில், ஹாலிவுட் பிரபலம் மார்க் ருஃபாலோ 'பாராஸைட்' திரைப்படத்தின் தொலைக்காட்சி தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடர் HBO நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவலின்படி இந்தத் தொடரின் முதல் ஐந்து, ஆறு எபிசோடுகளை இயக்குநர் போங் ஜோன் ஹோ இயக்குநர் ஆடம் மெக்கேவுடன் இணைந்து இயக்க உள்ளார். இந்தத் தொடரில் மார்க் ருஃபாலோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை தொலைக்காட்சி தொடராக எடுப்பது குறித்து போங் ஜோன் ஹோ சில ஐடியாக்களை பகிர்ந்துள்ளார்.
போங் ஜோன் ஹோ கூறுகையில், ஆஸ்கரில் இப்படம் நான்கு விருதுகளை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாது வேற்று மொழி திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படமாக ஆஸ்கர் வழங்கியதை வரலாற்று முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்.
இப்படத்திற்கு திரைக்கதை எழுத ஆரம்பித்திலிருந்து எனக்கு பல ஐடியாக்கள் இருந்தன. அது அனைத்தையும் என்னால் இந்த படத்தில் புகுத்த முடியவில்லை. இரண்டு மணிநேர படத்திற்கு எது தேவையோ அதைமட்டும் வைத்திருந்தேன். 'பாராஸைட்' மொத்தம் ஆறு மணி நேரம் திரைப்படமாகும். எனது ஐடியாக்கள் அனைத்தையும் எனது ஐபேடில் சேமித்து வைத்துள்ளேன். இது தொடர் எடுப்பதற்கு உதவும் என்றார். 'பாராஸைட்' திரைப்படத்தின் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: ஆஸ்கர் விருது: 1917, ஜோக்கர் மத்தியில் சரித்திரம் படைத்த 'பாராஸைட்'!